ரஜினி- கார்த்திக் சுப்புராஜ் படம் குறித்த புதிய அப்டேட்

Webdunia
வியாழன், 7 ஜூன் 2018 (17:30 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ரஜினி நடிப்பில் வெளியான காலா திரைப்படம் இன்று திரையரங்குகள் வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், ரஜினியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் இன்று துவங்கியுள்ளது.
 
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தில் அனிருத் இசையமைக்கிறார். திரு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.
 
விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சனத் ரெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்