கெளதமிக்கு பதில் பாஜகவில் இணைகிறாரா கஸ்தூரி.. அவரே அளித்த நக்கலான விளக்கம்..!
திங்கள், 30 அக்டோபர் 2023 (08:28 IST)
நடிகை கெளதமி சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக நடிகை கஸ்தூரியை பாஜகவில் இருக்க முயற்சி செய்து வருவதாக முன்னணி நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது. இந்த செய்திக்கு தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகை கஸ்தூரி நக்கலாக பதில் அளித்துள்ளார்.
25 ஆண்டுகளாக பாஜகவில் இருந்த நடிகை கௌதமி திடீரென அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில் கஸ்தூரியை பாஜகவில் இணைக்க வைக்கும் முயற்சி நடந்து கொண்டிருப்பதாக முன்னணி தினசரி நாளிதழ் ஒன்று செய்திகள் வெளியிட்டுள்ளது
ஏற்கனவே நடிகை கஸ்தூரி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து கொண்டு வருகிறார் என்பதும் பாஜகவுக்கு ஆதரவாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே கௌதமியின் இழப்பை ஈடுகட்ட கஸ்தூரியை இணைக்க முயற்சிகள் நடந்து வருவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது குறித்து நடிகை கஸ்தூரி தனது சமூக வலைதளத்தில் கூறியதாவது:
அட? எனக்கே தெரியாத விஷயம் எப்படி தினமலருக்கு தெரிந்தது ? இது செய்தியா, ஆருடமா, இல்லை சும்மா போட்டு வாங்கும் தந்திரமா ?
நான் இன்றுவரை எந்த கட்சியிலும் இல்லை, கட்சி சார்ந்த அரசியலை பற்றி சிந்திக்கவில்லை என்பதே உண்மை.