சூர்யாவுக்கு கதை இருக்கா?... சர்தார் மேடையில் இயக்குனர் ஆகும் ஆசைப் பற்றி பேசிய கார்த்தி!

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (09:06 IST)
சர்தார் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கார்த்தி இப்போது பங்கேற்று வருகிறார்.

கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் இன்னும் 3 தினங்களில் வெளியாக உள்ளது. கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் சர்தார் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் புரமோஷன் பணியை கடந்த சில நாட்களாக படக்குழுவினர் விறுவிறுப்பாக செய்துவரும் நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கார்த்தி இயக்குனர் ஆவது பற்றி பேசியுள்ளார்.

கார்த்தி முதலில் இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளராகவே சினிமாவுக்குள் வந்தார். இயக்குனர் ஆவதே அவர் முதல் ஆசையாக இருந்தது. ஆனால் பருத்தி வீரன் மூலம் நடிகரானார். இந்நிலையில் முன்பே ஒருமுறை அண்ணன் சூர்யாவை ஒரு படத்தில் இயக்க வேண்டும் என ஆசைப்படுவதாகக் கூறியிருந்தார்.

இதுகுறித்து இப்போது பேசியுள்ள அவர் “கதைக்கான ஒரு ஐடியா உள்ளது. நான் உதவி இயக்குனராக இருந்த போது எழுதிய கதை. அவரை இயக்கனும்னு ஆசை. அவரால் எந்த கதாபாத்திரத்திலும் வாழமுடியும்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்