தடுப்பூசி போட்டு கொண்டார் நடிகர் கார்த்தி: வைரல் புகைப்படம்!

வெள்ளி, 11 ஜூன் 2021 (13:56 IST)
தடுப்பூசி போட்டு கொண்டார் நடிகர் கார்த்தி: வைரல் புகைப்படம்!
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் சூரி வரை பல திரையுலக பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு தங்கள் ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அந்த வகையில் தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவரான நடிகர் கார்த்தி சற்று முன் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதுகுறித்து புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து நான் எனது முதல் தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருவதை அடுத்து கார்த்தியின் ரசிகர்கள் நாங்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளோம் என்று கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்

Took my first dose of vaccine. #CovidVaccine pic.twitter.com/eqLzqWAvol

— Actor Karthi (@Karthi_Offl) June 11, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்