இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் சம்மந்தமாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் “விரைவில் ஹரியானாவில் நடக்கவுள்ள தேர்தலை முன்னிட்டு சீக்கியர்கள் வாக்கு கிடைக்காது என்பதால் இந்த படத்துக்கு சென்சார் கிடைக்கவிடாமல் பாஜக தாமதப்படுத்துகிறது.” என வெளிப்படையான குற்றச்சாட்டை வைத்துள்ளது. இந்த படத்தின் இயக்குனர், நடிகரான கங்கனா ரணாவத் பாஜக எம்பியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று நடந்த வழக்கு விசாரணையில் சென்சார் போர்டு சம்மந்தமாக ஆஜரான வழக்கறிஞர் அபினவ் பேசும்போது “சென்சார் போர்டின் ரிவைசிங் கமிட்டி சொல்லும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க சொல்லியுள்ளது. தேவையான மாற்றங்கள் செய்த பின்னர் சான்றிதழ் வழங்கப்படும்” எனக் கூறியுள்ளார். இது சம்மந்தமாக முடிவெடுக்க ஜி ஸ்டுடியோஸ் சார்பில் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.