திரையுலகில் கடின உழைப்பாலும் தன் திறமையாலும் முன்னுக்கு வந்தவர்களில் ஒருவர் நடிகர் ராகவா லாரன்ஸ். குரூப் டான்சராக தனது திரை பயணத்தை துவங்கி டான்ஸ் மாஸ்டராக, நடிகராக, சிறந்த இயக்குனராக வலம் வருகிறார். இவரது நடிப்பிலும் இயக்கத்திலும் விசித்திரமான பல வெற்றி படங்களை தமிழில் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், காஞ்சனா 3 படம் தற்போது வரை ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளதாக வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தின் விக்கிபீடியா பக்கத்திலும் ரூ.100 கோடி வசூல் குவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.