அப்போது அத்திரைப்படம், பத்திரிக்கை ஊடங்கள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொது மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வெற்றிப்படமானது.
அதோடு இன்றளவும், சில முக்கிய அரசியல் நிகழ்வுகளின்போது, காமராஜ் திரைப்படத்தின் காட்சிகள் விமர்சனக் கணைகளாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அறம் சார்ந்த அரசியலை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட காமராஜ் திரைப்படத்தை இந்த புதிய தலைமுறையினரிடமும் கொண்டு சேர்க்க முடிவெடுத்துள்ளது ரமணா கம்யூனிகேஷன் பெருந்தலைவர் காமராஜரின் 122வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜ் திரைப்படம் தமிழகமெங்கும் ஜூலை 21 ம் தேதி மறுதிரையிடல் செய்யப்படுகிறது.