பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டார்! உண்மையை சொன்ன இயக்குனர்!

சனி, 30 மார்ச் 2019 (14:11 IST)
இத்தனை காலம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இயக்குனர் ஒரு பெண் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.



ஆம், கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இயக்குனர் மதுமிதா. இவர் ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி, தமிழில் `வல்லமை தாராயோ’, `மூணே மூணு வார்த்தை’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். மேலும் தற்போது இவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் KD என்கிற கருப்புதுரை படம் லண்டன் வேர்ல்ட் ப்ரீமியர் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.
 
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மதுமிதா, "எல்லா இயக்குநர்களுக்கும் ரஜினி சாரையும் கமல் சாரையும் வைத்து படம் இயக்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த ஆசை எனக்கு நிறைவேறியது `பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு கூப்பிட்டதுமே ஓகே சொல்லிட்டேன். காரணம், கமல் சார்தான். 
 
முதல் ரெண்டு எபிசோடு ஹிந்தி மொழியில என்ன பண்ணியிருக்காங்களோ, அதைப் பார்த்துப் பண்ணலாம்னு முடிவு செஞ்சோம். ஆனா, அது நம்ம மக்கள்கிட்ட வொர்க் அவுட் ஆகலை. நம்ம மக்களுக்கு எது பிடிக்கும்னு ஆலோசனை பண்ணி நாங்களே நிகழ்ச்சியை வடிவமைச்சோம். பிறகுதான் ஷோ ஹிட் ஆனது. 
 

 
நாங்க செய்யுற ஒவ்வொரு டிஸ்கஷன்லேயும் கமல் சாருடைய இன்புட்ஸ் நிறைய இருக்கும்.சின்னச் சின்ன விஷயங்களையும் ரசிச்சுப் செய்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக கமல் சாரை இயக்கியது என் வாழ்நாள்ல மறக்க முடியாத தருணங்கள் என நெகிழ்ந்தார் மதுமிதா. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்