ஜுலை 1 திரைக்கு வரும் ஜாக்சன் துரை

செவ்வாய், 14 ஜூன் 2016 (11:09 IST)
ஜுலை 1 திரைக்கு வருவதாக இருந்த கபாலி தள்ளிப் போனதால் அந்த தேதியை வேறு படங்கள் கைப்பற்றி வருகின்றன.


 


சத்யராஜ், சிபிராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜாக்சன் துரை படத்தை ஜுலை 1 வெளியிடுகின்றனர்.
 
பர்மா படத்தை இயக்கிய தரணிதரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பர்மாவுக்கு முற்றிலும் வித்தியாசமாக பேய் படமாக இது தயாராகியுள்ளது. மொட்ட ராஜேந்திரன், பிந்து மாதவி, கருணாகரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இதன் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது. 
 
பேய் படங்களின் டீலரான ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை வாங்கியுள்ளது. சென்சார் யுஏ சான்றிதழ் தந்ததால் படம் வரிச்சலுகை இன்றி வெளியாகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்