துருவ நடசத்திரம் படத்தின் பிஸ்னஸைப் பாதித்த ஜோஷ்வா… சிக்கலில் கௌதம் மேனன்!

vinoth
செவ்வாய், 12 மார்ச் 2024 (09:54 IST)
ஐசரி கணேஷின் உறவினரான வருண் நடிப்பில்  ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ என்ற படத்தை கௌதம் மேனன் சில ஆண்டுகளுக்கு முன்பே இயக்கி முடித்தார். ஆனால் படம் சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடந்தது. கிடப்பில் கிடந்த இந்த திரைப்படம் கடந்த மார்ச் 1 ஆம் தேதி ரிலீஸானது.

ஆனால் படம் ரிலீஸான பிறகு பார்வையாளர்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. படம் முழுவதும் ஒரே ஆக்‌ஷன் காட்சிகளாக இருப்பதாவும் விமர்சனங்கள் எழுந்தன. கௌதம் மேனன் என்ற முன்னணி இயக்குனரின் படமாக இருந்தாலும் வசூல் படுமோசம் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் ஜோஷ்வா படத்தின் இந்த தோல்வியால் கௌதம் மேனனின் அடுத்த படமாக ரிலீஸ் ஆகவுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் பிஸ்னஸையும் பாதித்துள்ளதாம். ஜோஷ்வா போலதான் அந்த படமும் இருக்கும் என்ற எதிர்மறை எண்ணம் படத்தின் மேல் முதலீடு செய்துள்ளவர்களுக்கு எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் கௌதம் மேனன் இப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்