கதாநாயகன் ரியோ ராஜ்,தனது சமீபத்திய திரைப்படமான “ஜோ”வின் அதிரடி வெற்றிக்குப் பிறகு, களமிறங்கும் புதிய திரைப்படத்திற்கான பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடக்கம் சென்னையில் நடைபெற்றது . இயக்குனர்கள் ஹரி, முத்தையா ஆகியோரை வைத்து, ஜனரஞ்சகமான வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்த “ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ்” நிறுவனம் சார்பாக, மணிகண்டன் கந்தசுவாமியின் மேற்பார்வையில் , புதுமுக இயக்குனர் “பிளாக்ஷிப்” கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் இத்திரைப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.
பிளாக்ஷிப் நிறுவனத்தின் இணை தயாரிப்பில் உருவாகும் இந்தத் திரைப்படத்தில், “ஜோ” திரைப்படத்தின் வெற்றி ஜோடியான ரியோ- மாளவிகா மனோஜ் மீண்டும் இணைகிறார்கள். மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு, சித்துகுமார் இசை, வருண் கே.ஜி.யின் எடிட்டிங், வினோத் ராஜ்குமாரின் கலையமைப்பு, சந்துருவின் டிசைன், மீனாட்சியின் ஆடை வடிவமைப்பு, என ஒரு மெகா இளைஞர்கள் கூட்டணியில் இப்படம் கலை கட்ட தொடங்கியுள்ளது .
மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் பிளாக்ஷிப் ஆர்.ஜே.விக்னேஷ் , ஷீலா ராஜ்குமார், டைரக்டர் ஏ.வெங்கடேஷ், கஜராஜன், ஜென்சன் திவாகர், ஆகியோரும் களமிறங்குகிறார்கள். இன்று தொடங்கி இரண்டே மாதங்களில் படப்பிடிப்பை முடித்து, இந்த வருட பிற்பகுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் .