போனிகபூர்-ஸ்ரீ தேவி தம்பதியின் மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்து வரும் நிலையில் அவர் தென்னிந்திய மொழிகளில் முதன் முதலாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பதாகவும் விஜய் தேவர்கொண்டா நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த படம் இன்னும் தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் ஜான்வி இப்போது கோலமாவு கோகிலா திரைப்படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.