அது என்ன பிஃப்த் போர்ஸ் ? – 2.0 படம் பார்த்தவர்கள் கவனத்திற்கு…

Webdunia
சனி, 1 டிசம்பர் 2018 (12:44 IST)
2.0 படம் இரு தினங்களுக்கு முன்னால் ரிலிஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது அந்த படத்தில் கூறப்பட்டிருக்கும் பிஃப்த் போர்ஸ் பற்றித் தெரிந்து கொள்வோம்.

இயற்பியலில் இதுவரை தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது, நான்குவகையான போர்ஸ்களே (வலிமை). அவை 1. ஈர்ப்பு வலிமை, 2. மின்காந்த வலிமை 3. வலிமையான அணுக்களுக்கிடையிலான போர்ஸ் 4. வலிமையற்ற அணுக்களுக்கிடையிலான போர்ஸ்
ஆனால் சில விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் பிஃப்த் போர்ஸ் என்ற ஒன்று இருக்கிறது என்றும் அதற்கான சில தீயரிகளையும் கூறிவருகின்றனர். ஆனால் இந்த தீயரிகள் யாவும் முந்தைய நான்கு போர்ஸ்களோடு ஒத்துப் போகாமல் அந்தரத்தில் தொங்குகின்றன.

கரும்பொருள் அல்லது கருந்துளைப் பற்றிய ஆய்வுகள் அதிகமாகியுள்ள காலத்தில் இருந்தே பிஃப்த் போர்ஸ் பற்றிய தகவல்களும் பரவி வருகின்றன. கருந்துளைகள் பிஃப்த் போர்ஸோடு நெருங்கிய தொடர்பிலிருக்கலாம் என சில ஆராய்ச்சியாளர்கள் கணித்து கூறியுள்ளன.

எனவெ பிஃப்த் போர்ஸ் குறித்து இதுவரை எந்தவொரு தெளிவான முடிவுக்கும் வர இயலவில்லை. ஆனால் 2.0 படத்தில் இறந்த பறவைகளின் ஆண்மாவை எழுப்பி அதன் மொத்த சக்திகளையும்  ஒருங்கிணைத்து அதுதான் பிஃப்த் போர்ஸ் என்பது போல உருவாக்கியுள்ளனர்.

அதனால் அறிவியல் தெரிந்த சிலர் 2.0 ஒன்றும் சயின்ஸ் பிக்‌ஷன் படம் அல்ல, அது வெறும் ராம நாராயணன் பாணி பேய்ப்படம் தான் என்று கருத்துக் கூறி வருகின்றனர். அந்தப் பேய்ப்படத்திற்கு ஷங்கரும் ஜெயமோகனும் சேர்ந்து அறிவியல் முலாம் பூச முயன்றுள்ளதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்