இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சசிக்குமார் நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் “கென்னடி கிளப்”. பெண்கள் கபடியை மையமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. பாரதிராஜா, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
பாரதிராஜா மிகப்பெரிய கபாடி சாம்பியன். கிராமத்து பெண்களை மிகப்பெரிய கபாடி வீரர்களாக மாற்ற துடிக்கிறார் பாரதிராஜா. அந்த பெண்களுக்கு கோச்சாக இருந்து பயிற்சி கொடுக்கிறார் ஒரு காலத்தில் பாரதிராஜாவிடம் பயிற்சி பெற்ற கபாடி வீரரான சசிக்குமார். அந்த பெண்கள் குழு கபாடி சாம்பியன் பட்டத்தை பெற போராடுவது விறுவிறுபான கதை என ட்ரெய்லரை பார்த்து சிறியளவில் அனுமானிக்க முடிகிறது.
நிறைய ரசிகர்கள் இந்த ட்ரெய்லர் நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். தற்போது விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘பிகில்’ திரைப்படமும் பெண்கள் கால்பந்து அணியை பற்றிய படமாக வெளிவர இருக்கிறது. அதையும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டு படத்தின் கதையும் பெண்கள் விளையாட்டை மையப்படுத்தி இருப்பதால் கதையும் ஒன்றுபோலவே இருக்குமோ என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.