இங்கிலாந்தில் நடந்து வரும் டெஸ்ட் தொடரில் அஸ்வினுக்கு நான்கு டெஸ்ட்களாக வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதற்குக் காரணமாக ஆடுகளம் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இல்லை என சொல்லப்படுகிறது. இங்கிலாந்து அணியிலும் சுழல்பந்து வீச்சாளரை தேர்வு செய்வதில்லை. ஆனால் ஜடேஜாவுக்கு கொடுத்த வாய்ப்பை அஸ்வினுக்கு கொடுத்திருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். ஏனென்றால் அவரும் ஒரு மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்தான்.