கூலித்தொழில் செய்யும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்!

செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (10:35 IST)
2018 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்திய அணி வெற்றி பெற்றது.

2018-ம் ஆண்டு பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை நடந்தது. இதில் இந்திய அணி இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. அந்த அணியில் இடம்பிடித்திருந்தவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நரேஷ் தும்டா.

ஆனால் இப்போது அடுத்த உலகக்கோப்பைக்கு தயாராகும் விதமாக பயிற்சிகள் கூட மேற்கொள்ள முடியாமல் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறார்.  அவர் குஜராத் முதல்வரை அணுகி மூன்று முறை வேலை கேட்டும் கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளார். குடும்பத்தின் நிலைகருதி அரசு வேலை வழங்கவேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்