திரைப்படக் கல்லூரி மாணவர்களாக இருந்து தமிழ் சினிமாவில் சாதித்தவர்களில் அருண் பாண்டியன், ராம்கி மற்றும் ஆபாவாணன் ஆகியவர்கள் முக்கியமானவர்கள். இதில் நண்பர்களான ராம்கியும் அருண் பாண்டியனும் இணைந்து இணைந்த கைகள் என்ற படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர். அதில் பாகிஸ்தானில் கைதியாக இருக்கும் புகைப்படக் காரர் ஒருவரை இந்தியாவுக்கு தப்புவித்து அழைத்து வரும் கதாபாத்திரத்தில் இருவரும் நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது.