தமிழில் மலையாள சார்லி

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2016 (11:18 IST)
மலையாளத்தில் வெற்றி பெறும் படங்கள் தொடர்ச்சியாக தமிழில் ரீமேக் செய்யப்படுகின்றன.


 


அவற்றின் வெற்றி சதவீதம் மிகக்குறைவாக இருந்த போதிலும், ரீமேக் செய்யப்படுவது தொடர்கிறது.
 
கடந்த டிசம்பரில் திரைக்கு வந்த மலையாளப் படம், சார்லி. துல்கர் சல்மான், பார்வதி, அபர்ணா கோபிநாத், நெடுமுடிவேணு உள்ளிட்டவர்கள் நடித்திருந்த இந்தப் படத்தை மார்டின் ப்ராகாட் இயக்கியிருந்தார். படம் மலையாளத்தில் பெரும் வெற்றியை பெற்றது.
 
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரமோத் ஃபிலிம்ஸ் வாங்கியுள்ளது. துல்கர் நடித்த வேடத்தில் மாதவனை நடிக்க வைக்க பிரமோத் ஃபிலிம்ஸ் முயற்சி மேற்கொண்டு வருகிறது. விரைவில் சார்லியின் தமிழ் தழுவல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
அடுத்த கட்டுரையில்