ஐஸ்வர்யா தனுஷ் எழுதிய ஸ்டாண்டிங் ஆன் என் ஆப்பிள் பாக்ஸ் புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. விழாவில் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார், நடிகை சோனாக்ஷி சின்ஹா, அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதா பச்சன் நந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
என் கணவர் தனுஷும், அப்பாவும் ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைத்துள்ளனர். சிறுவயதில் இருந்தே தனுஷ் என் தந்தையின் ரசிகர். இன்னாரின் மருமகன் என்று இல்லாமல் தனுஷ் தன் முயற்சியால் பெரிய ஆளானது என் தந்தைக்கு மிகவும் பிடிக்கும்.