வடிவேலு மேல் உச்சகட்ட கடுப்பில் லைகா… என்ன ஆகும் 24 ஆம் புலிகேசி!

திங்கள், 21 ஜூன் 2021 (15:08 IST)
வடிவேலு நடிப்பில் ஷங்கர் மற்றும் லைகா தயாரிப்பில் உருவான 24 ஆம் புலிகேசி திரைப்படம் பல பிரச்சனைகளால் கிடப்பில் போடப்பட்டது.

நடிகர் வடிவேலு 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவில் தீவிரமாக நடிக்கவில்லை. இடையில் சில படங்களில் நடித்திருந்தாலும் எதுவும் அவர் பெயர் சொல்லும் படங்களாக அமையவில்லை. இந்நிலையில் தனது வெற்றிப்படமான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதில் தொடர்ந்து நடிக்க மறுத்தார். இதனால் அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போட்டது.

இந்நிலையில் இப்போது முன்னணி தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இது சம்மந்தமாக வடிவேலு சார்பாக ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தினாராம். அப்போது ஷங்கர் தனக்கு வடிவேலு மேல் கோபம் இல்லை என்று சொல்லி லைகாவிடம் பேச்சுவார்த்தைக்கு அனுப்பியுள்ளார். ஆனால் அவர்களோ வடிவேலு மேல் இன்னமும் பயங்கரமான கோபத்தில் இருக்கிறார்களாம்.

இதனால் இதுவரை ஆன செலவு தொகையைக் கொடுத்துவிட்டு நீங்களே வேண்டுமானாலும் படத்தை தயாரித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டாராம். இதனால் 24 ஆம் புலிகேசி நிலைமை என்ன ஆகும் எனத் தெரியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்