இந்நிலையில் தனக்கென தனி ரெக்கார்டிங் ஸ்டுடியோவை இளையராஜா உருவாக்கியுள்ளார். இந்நிலையில் பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தனது இசை வாத்தியங்கள், உபகரணங்களை எடுத்து செல்லும் முன்னர் ஒரு நாள் அங்கு தியானம் செய்ய தன்னை அனுமதிக்க வேண்டும் என இளையராஜா உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இதை விசாரித்த நீதிமன்றம் இளையராஜாவை அனுமதிப்பது குறித்து நாளைக்குள் பதிலளிக்க பிரசாத் ஸ்டுடியோவிற்கு உத்தரவிட்டுள்ளது.