இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனரும் , நடிகருமான பாக்யராஜ், வருண் தரப்பிலும் நியாயம் இருக்கிறது. அவர் வளர்ந்து வரும் இயக்குநர். 10 வருடமாக சினிமாவில் வரவேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறார். தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது குறித்து வருணுக்கு 10 வருடத்திற்கு முன்னதாகவே தோன்றி இக்கதையை உருவாக்கியுள்ளார் என வருணுக்கு ஆதரவாகப் பேசியிருந்தார்.
இந்நிலையில் நடிகரும், பாக்யராஜ் மகனுமான சாந்தனு, “சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் ஒருவன் “இல்லை” , என்றைக்கும் விஜய் அண்ணா , எனக்கு விஜய் அண்ணா தான் .மேலும் தளபதி விஜய் ரசிகர்களுக்கு என் மீது கோவம் இல்லையெனில் நானும் சர்க்கார் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பேன் என்று கூறிய சந்தனு, தீபாவளியை கொண்டாடுவோம் சர்க்கார் கொண்டாடுவோம் ! ” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.