பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சனிக் கிழமையோடு 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த போட்டியின் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டார். மேலும் அவருக்கு ரூ.50 லட்சத்திற்கு காசோலை வழங்கப்பட்டது. இந்த சீசன் முழுவதும் போட்டியாளர்களுக்காக மக்கள் 76,76,53,065 வாக்குகள் அளித்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கூறுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட்படி நடக்கும் என்று நினைத்துதான் சென்றேன். ஆனால் அப்படி இல்லை. நாங்களே சமைத்து சாப்பிட்டு, நாங்கள் எடுத்து சென்ற உடைகளைதான் உடுத்தினோம். மேலும் சில நேரங்களில் மட்டுமே பிக்பாஸ் உடை தந்தார். பிக்பாஸ் வீட்டில் எங்கள் பொறுமையை சோதித்தார். டாஸ்க்குகள் மிகவும் கடினமாக இருந்தன. பிக்பாஸ் வீட்டில் இருந்த பலர் வாக்குகளுக்காக போலியாக நடித்தனர். ஆனால் நானும் அப்படி வாக்குகளுக்காக மக்களை ஏமாற்ற விரும்பவில்லை.