கடந்த ஜூன் 17 ஆம் தேதி சென்னையில் மாணவ, மாணவிகளுக்கு கல்விவிழாவை மக்கள் இயக்கம் மூலம் நடத்தினார், இதற்கு சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.
சமீபத்தில், சென்னை, கொங்கு மண்டலம் உள்ளிட்ட 5 மண்டலங்களில் விஜய் அரசியலுக்கு வருவது பற்றி ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. விஜய்யால் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுத்த முடியும் என 76.53 சதவீதம் பேரும், இதற்கு எதிராக 23.47 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், விஜய் ரசிகர் ஒருவர் விஜய்யைப் பற்றி திருவள்ளுவர் ஒரு எழுத்தாளர் அவளோ தான் ஆனால், தளபதி பாடகர் நடிகர் ஆடுபவர் நல்ல மனிதன் புரியூதா என்று பதிவிட்டிருந்ததைக் குறிப்பிட்டு, பிரபல சினிமா விமர்சகர் அந்தனன், நான் சொன்னேன்ல விஜய் சி.எம். ஆயிடுவாருன்னு என்று பதிவிட்டுள்ளார்.