சீனுராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் தென் மேற்குப்பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை ஆகியப் படங்களுக்கு அடுத்து மாமனிதன் படம் உருவாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு2019 ஆம் ஆண்டே முடிந்தது. ஆனால் இன்னமும் ரிலிஸ் ஆகாமல் உள்ளது. இந்த படத்தைத் தயாரித்துள்ள யுவன் ஷங்கர் ராஜா இப்போது ரிலிஸுக்கான வேலைகளில் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்துக்காக விஜய் சேதுபதியை முதலில் ஒப்பந்தம் செய்ய சென்ற போது யுவனிடம் தான் நிறைய படங்களில் நடித்து வருவதாகவும் தற்போது தன்னால் நடிக்க முடியாது எனவும் விஜய் சேதுபதி கூறியுள்ளார். ஆனால் யுவன் இந்த படத்தில் தானும் இளையராஜாவும் சேர்ந்து இசையமைக்க இருப்பதாக சொன்ன உடனேயே விஜய் சேதுபதி ஒத்துக்கொண்டாராம். இதை சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.