‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு எகிறும் டி.ஆர்.பி.

வெள்ளி, 14 ஜூலை 2017 (18:04 IST)
கமல் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், தேசிய மகளிர் ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது.



 
கடந்த பிப்ரவரி மாதம் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார் பிரபல நடிகை. இந்த வழக்கில், மலையாள நடிகரான திலீப் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர் என்ற முறையில்  நடிகையின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த கமல், பிரபல நடிகை கடத்தல் வழக்கில் சட்டமும், நீதியும் சரியாகச் செயல்பட்டிருக்கிறது’ என்று தெரிவித்தார். நடிகையின் பெயரை வெளிப்படையாகக் கூறுவது தவறு என்று அங்கிருந்த நிருபர் சொல்லியும், தவறு கிடையாது என வாதிட்டார் கமல்.

இந்நிலையில், நடிகையின் பெயரை வெளிப்படையாகக் கூறியதற்காக கமலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது தேசிய மகளிர் ஆணையம். அத்துடன், அதுகுறித்து விளக்கம் கேட்டு கமலுக்கு நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்துள்ளது. மேலும், ‘பிக் பாஸ்’ விவகாரத்தால் கமல் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைகளால், கமல் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு டி.ஆர்.பி. ரேட்டிங் எகிறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்