மக்கள் செல்வனுக்கு மனமார்ந்த நன்றி

Webdunia
சனி, 7 மே 2016 (11:19 IST)
சீனு ராமசாமியின் இடம் பொருள் ஏவல் இன்னும் வெளியாகவில்லை. அப்படத்தில் நடித்த விஜய் சேதுபதி, சீனு ராமசாமிக்காக நடித்துக் கொடுத்தப் படம் தர்மதுரை. 


 
 
தமன்னா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. முதலாவதாக படத்தின் டப்பிங் பணிகள் நேற்றோடு முடிந்தன. டப்பிங் பணிகள் முடிவடைந்ததை கூறியிருக்கும் சீனு ராமசாமி, மக்கள் செல்வனுக்கு மனமார்ந்த நன்றி என நெகிழந்திருக்கிறார்.
 
தர்மதுரையில் நடித்துள்ள விஜய் சேதுபதிக்கு சீனு ராமசாமி, மக்கள் செல்வன் என்று பட்டம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்