#வரிகட்டுங்க_தனுஷ்: டிரெண்டாகும் தனுஷ் கார் விவகாரம்!

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (12:42 IST)
சமூக வலைத்தளமான டிவிட்டரில் #வரிகட்டுங்க_தனுஷ் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 

 
கடந்த 2015 ஆம் ஆண்டில் நடிகர் தனுஷ் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் “ஒரு சோப்பு வாங்கும் சாமானியர் கூட சரியாக வரி கட்டுகிறார்கள். 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் பால்காரர் கூட ஜிஎஸ்ரி வரி கட்டுகிறார். 
 
ஆனால் வரியை நீக்க சொல்லி அவர் நீதிமன்றத்தை நாடுகிறாரா? மக்கள் வரிப்பணத்தில் அமைந்த சாலையில் பயணிக்கிறீர்கள் எனும்போது முழு வரியையும் கட்டலாமே? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
மேலும் கார் வாங்கும்போது தனது தொழில் என்னவென்று குறிப்பிடாதது குறித்து தனுஷிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, நீங்கள் எத்தனை கார் வேண்டுமானாலும் வாங்குங்கள் ஆனால் முழுமையாக வரியை கட்டுங்கள் என கூறியுள்ளார்.
 
இந்நிலையில் ஏற்கனவே 50% வரியை கட்டி விட்டதாகவும் மீத தொகையை கட்ட தயாராக இருப்பதாகவும் தனுஷ் தரப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே சமூக வலைத்தளமான டிவிட்டரில் #வரிகட்டுங்க_தனுஷ் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. முன்னதாக விஜய்க்கும் இவ்வாறு ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்