மஹா திரைப்படம் வெளிவரவுள்ள நிலையில் ஹன்சிகா மோத்வானி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், இந்த 2020 ஆம் ஆண்டு எல்லோருக்கும் பெரும் பாதிப்பையும் இழப்புகளையும் உயிர் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தங்களின் குடும்ப உறுப்பினர்களை இழந்துவாடுபவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன். இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையவும் இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன்.
தற்போது மஹா திரைப்படம் முழுமையாக முடிவடைந்துள்ளது. இப்படத்தில் நடித்த அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இயக்குநர் யு.ஆர்.ஜமீல், தயாரிப்பாளர்கள் மதியழகன், அப்துல் மாலிக் முகம்மது ஜீபையர் மற்றும் ராசிக் அஹ்மது எல்லோருக்கும் எனது நன்றிகள். இப்படம் கோடைக்காலத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இப்படத்தில் ஒரு பாத்திரத்தில நடித்துள்ள சிம்புவுக்கும் எனது நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.அவரது ரசிகர்களுக்கு இப்படம் பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.