ஹெச் வினோத்தோடு ஒரு படம்… லாக் செய்த சிவகார்த்திகேயன்!

vinoth
வியாழன், 4 ஜூலை 2024 (12:08 IST)
தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் ஹெச் வினோத், அதன் பின்னர் தீரன், வலிமை, துணிவு என அடுத்தடுத்து மாஸ் நடிகர்களின் படங்களை இயக்கி முன்னணி இயக்குனரானார்.

கமல்ஹாசனோடு ஒரு படம் பண்ண ஒப்பந்தம் ஆன, சில காரணங்களால் அந்த படம் தற்போது கிடப்பில் போடப்பட்டது. இப்போது அவர் விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்க ஆயத்தமாகி வருகிறார்.

இந்நிலையில் ஹெச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் விஜய் மற்றும் தனுஷ் படங்களை முடித்த பிறகு இந்த படம் தொடங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்