முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்- விஜயகாந்த்

புதன், 5 மே 2021 (18:24 IST)
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

சாதாரண மக்கள் முதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படுவருகின்றனர்.

தமிழகத்தில் நாளொன்றுக்கு சுமார் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் ஆக்ஸிஜன் சிலிண்ட்ர்கள் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது.

தேசியர் பேரிடர்  மேலாண்மைச் சட்டம் 2005ன் கீழ்  ஏற்கனவே ஊரடங்கு அமலில் உள்ளது. நாளை முதல்  தமிழக  அரசு புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், இன்று புறநகர் ரயில்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் , நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

நாளுக்கு நாள் பெருகி வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். நாளுக்கு நாள் பெருகி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் இல்லை என்று வெளியாகும் செய்தி வேதனையளிக்கிறது.

கொரோனாவிற்கு போதிய சிகிச்சையின்றி நாள்தோறும் பல உயிர்கள் பலியாகி வருவது அதிர்ச்சியளிக்கிறது.இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து,ஆங்காங்கே முகாம்கள் அமைத்து,18 வயதிலிருந்து அனைவருக்குமே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
 

கொரோனாவிற்கு போதிய சிகிச்சையின்றி நாள்தோறும் பல உயிர்கள் பலியாகி வருவது அதிர்ச்சியளிக்கிறது.இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து,ஆங்காங்கே முகாம்கள் அமைத்து,18 வயதிலிருந்து அனைவருக்குமே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.(2-2) pic.twitter.com/lwnu9TR0i2

— Vijayakant (@iVijayakant) May 5, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்