சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கிய எஸ்.ஆர்.பிரபு

திங்கள், 9 ஏப்ரல் 2018 (11:26 IST)
தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு, சினிமா தொழிலாளர்களுக்கு 10 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். 
கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதியில் இருந்து தமிழ்நாட்டில் நடைபெறும் படப்பிடிப்புகளும், 23ஆம் தேதியில் இருந்து வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது, சினிமாவில் வேலைசெய்து தங்கள் வயிற்றைக் கழுவும்  தொழிலாளர்கள்தான்.
 
இவர்களுக்கு உதவும் வகையில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு, 10 லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். தொழிலாளர்கள் கூட்டமைப்பான ஃபெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் அவர் இதை வழங்கினார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் இணையதளம் ஒன்று நடிகர் சங்கத்துக்கு அளித்த 10 லட்ச ரூபாயையும் விஷால் ஃபெப்சிக்கு வழங்கினார் என்பது  குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்