தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது என்ற செய்தியும் ஏற்கனவே வெளிவந்தது.
இந்த நிலையில், இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது, மேலும் இப்படத்தின் ஹீரோவும் உறுதி செய்யப்பட்டுள்ளார். ஜேசன் சஞ்சயின் முதல் இயக்கத்தில் கவினுடன் பல ஹீரோக்கள் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இதுவரை ஹீரோ முடிவாக அறிவிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று வெளியாகிய மோஷன் போஸ்டரில் சந்தீப் கிஷான் இப்படத்தின் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமன் இசையமைப்பில், பிரவீன் படத்தொகுப்பில் இப்படம் உருவாக உள்ளது என்று மோஷன் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ளது. ஆரம்பகட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ஜேசன் சஞ்சய் முதல் படம் என்பதால், இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.