விஜய் சேதுபதியின் 96 படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியீடு; மாலை டீசர்

வியாழன், 12 ஜூலை 2018 (13:02 IST)
விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம், 96. இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது.
சி.பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துவரும் படம் ‘96’. இந்தப் படத்தில் த்ரிஷா  ஹீரோயினாக நடிக்க, ஜனகராஜ், ‘ஆடுகளம்’ முருகதாஸ், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய  வேடங்களில் நடித்துள்ளனர். சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் மேனன் இசையமைக்கிறார்.
 
விஜய் சேதுபதி, த்ரிஷா இருவரும் ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸாகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை, சன் டிவி வாங்கியுள்ளது.
இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக கூறி வந்த நிலையில், தற்போது படத்தின் போஸ்டரை ட்விட்டர்  பக்கத்தில் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் காலையிலேயே வெளியிட்டது. மேலும் படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு  வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளது.
 
இந்த போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள திரிஷா இந்த படத்தின் டீசரை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன், இனியும் காத்திருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்