கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா நடிப்பில், கமல் இயக்கி 2013ஆம் ஆண்டு வெளியான படம் ‘விஸ்வரூபம்’. பல தடைகளைக் கடந்து இந்தப் படம் ரிலீஸானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்ட இந்தப் படம், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தை எடுக்கும்போதே அடுத்த பாகத்துக்கான 40 சதவீத காட்சிகளை கமல் எடுத்துவிட்டார். எனவே, 2013ஆம் ஆண்டே இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. ஆனால், தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு ஏற்பட்ட பிரச்னையால், இதுவரை இரண்டாம் பாகம் ரிலீஸாகவில்லை.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கமல், படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் வாங்கிவிட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 7 மணிக்கு வெளியிடப்படும் என ட்விட்டரில் அறிவித்துள்ளார் கமல்.