பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலை உயிரிழந்தார். அவரது இறப்பு தமிழ் திரையுலகினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மக்கள் , திரைநட்சத்திரங்கள் , திரளான ரசிகர்களின் பேரணியுடன் நடிகர் விவேகிற்கு இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது.