சூது கவ்வும், கலகலப்பு, தொடரி உள்ளிட்ட படங்களில் காமெடி வேடத்தில் நடித்தவர் கருணாகரன். அஜித் நடித்த விவேகம் படத்திலும் நடித்துள்ளார். இவருக்கும் விஜய் ரசிகர்களுக்கும் நீண்ட நாட்களாக பிரச்சனை நீடித்து வருகிறது.
ஏனென்றால் கருணாகரன் விஜய் பற்றி பேசுகையில் நடிகர்கள் தங்களின் ரசிகர்கள் எவ்வாறு நடந்து கொள்வது என்று சொல்லிக்கொடுக்க வேண்டும். ஊருக்கு மட்டுமே அட்வைஸ் பண்ணக்கூடாது. தாமும் பின்பற்ற வேண்டும் என்றெல்லாம் கூறியிருந்தார். இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் கருணாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். இவர்கள் இப்படி செய்வது தனக்கு விஜய் மீதான மரியாதையை குறைக்க செய்கிறது என கருணாகரன் கூறியிருந்தார்.