கீர்த்தி சுரேஷ்-சமந்தாவுடன் இணைந்த துல்கார் சல்மான்

திங்கள், 24 ஏப்ரல் 2017 (07:28 IST)
நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்  மகாநதி' என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சாவித்ரி கேரக்டரில் கீர்த்திசுரேஷூம் மற்றொரு முக்கிய கேரக்டரில் சமந்தாவும் நடித்து வருகின்றனர்.



 
 
இந்த நிலையில் இந்த படத்தில் ஜெமினிகணேசன் கேரக்டரில் நடிக்க கடந்த சில நாட்களுக்கு முன் சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் தற்போது அந்த கேரக்டரில் ஓகே கண்மணி' நாயகன் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார். 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும், சாவித்ரியின் பெருமையை கூறும் இந்த படம் நிச்சயம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் நல்ல வரவேற்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்