இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு 75% வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் கடும் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டு கடிதம் எழுதி வருவதாகவும் இதனால் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் தேஜா கடும் அதிர்ச்சியில் இருந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், சிரஞ்சீவி நடிப்பில், ராம்சரண் தயாரிப்பில் வெளியான ஆச்சார்யா படம் படு தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்தது. ஏற்கனவே இது குறித்து, சிரஞ்சீவி ஆச்சார்யா படத்தின் தோல்வி என்னைப் பாதிக்கவில்லை. இயக்குனர் கூறுயபடி நடித்தேன். அதேபோல் இந்தத் தோல்வி ராம்சரணையும் பாதிக்காது. ஏனென்றால் இப்படத்தின் வெற்றி அவர் கையில் என்பதில்லை என்பது அவருக்குத் தெரியும். ஆனால், நானும் ராம்சரணும் இணைந்தது நடித்தது தோல்வியடைந்தது என்னைப் பாதித்துள்ளது. இதற்காக எதிர்காலத்தில் நாங்கள் இணைந்து நடிக்காமல் இருக்கப்போவதில்லை. வாய்ப்பு வந்தால் மீண்டும் இணைவோம் எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிய பேசிய சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, ஆச்சார்யா படம் தோல்வியடைந்ததற்கான முழு பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். நானும், என் மகன் ராம்சரணும் அப்படத்திற்காக வாங்கிய சம்பளத்தில் 80% திருப்பிக் கொடுத்துவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.