த்ரிஷ்யம்' படத்தின் சீன ரீமேக் உரிமையின் வியாபாரம்

புதன், 13 செப்டம்பர் 2017 (06:00 IST)
மோகன்லால், மீனா நடிப்பில் ஜித்துஜோசப் இயக்கிய 'த்ரிஷ்யம்' திரைப்படம் தமிழ் உள்பட கிட்டத்தட்ட இந்தியாவின் முக்கிய மொழிகளில் ரீமேக் ஆகி அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆகியது. 



 
 
இந்த நிலையில் இந்த படத்தின் சீன ரீமேக் உரிமையின் வியாபாரம் சமீபத்தில் நடந்துள்ளது. இன்று சீனத்தலைநகர் பீஜிங் நிறுவனம் ஒன்று இந்த படத்தின் சீன ரீமேக் உரிமையை முறைப்படி பெற்றுள்ளது. எனவே மிக விரைவில் சீன மொழியில் இந்த படம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது
 
இந்திய படங்களான 'டங்கல்', பாகுபலி 2' ஆகிய படங்கள் சீன மொழியில் டப் செய்யப்பட்டு நல்ல வசூலை பெற்ற நிலையில் தற்போது இந்திய மொழி படம் ஒன்று சீன ரீமேக் உரிமையின் வியாபாரம் ஆகியுள்ளது பெருமைக்குரியதாக கருதப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்