ராம் இயக்கத்தில் வசந்த் ரவி, அஞ்சலி மற்றும் ஆன்ட்ரியா நடித்துள்ள படம் ‘தரமணி’. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை, ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்துள்ளார். படத்தைப் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள், படத்தில் பெண் மது அருந்தும் காட்சி இருப்பதாகக் கூறி ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர்.
“ஹீரோக்கள் ராவாக மது குடித்தால் ‘யு’ அல்லது ‘யு/ஏ’ சான்றிதழ் தரப்படுகிறது. பெண் மது அருந்தினால் மட்டும் ‘ஏ’ சான்றிதழா?” என நக்கலாகக் கேள்வி கேட்டுள்ளார் இயக்குனர் ராம். ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘விவேகம்’, தள்ளிப் போகலாம் எனத் தெரிகிறது. எனவே, பெரிய போட்டி இல்லாமல் வெளியாகிறது ‘தரமணி’.