திருநங்கையாக பிறக்க ஆசைப்படும் மிஷ்கின்: போட்டுடைத்த தமிழச்சி தங்கபாண்டியன்!

திங்கள், 17 அக்டோபர் 2016 (13:11 IST)
இயக்குனர் மிஷ்கின், தான் திருநங்கையாக பிறந்திருக்கலாம் என அடிக்கடி சொல்வார் என திரைப்படம் ஒன்றின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன் கூறியுள்ளார்.


 
 
இயக்குனர் ராம் ஹீரோவாகவும், இயக்குனர் மிஷ்கின் வில்லனாகவும் நடிக்கும் படம் சக்ரவர்த்தி. இயக்குனர் ஆதித்யா இயக்கும் இந்த படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவிற்கு தமிழச்சி தங்கபாண்டியன் வந்தார்.
 
அப்போது பேசிய அவர், தான் இந்த படத்தில் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். மேலும் இந்த படத்தின் வில்லன் மிஷ்கினை எந்தவிதமான அடையாளத்துக்குள்ளும் அடக்கிவிட முடியாது.
 
மிஷ்கின் ஒரு தனிமையின் சாண்டாகிளாஸ். நான் ஒரு திருநங்கையாக பிறந்திருக்கனும் என அவர் அடிக்கடி சொல்வார். அவர் ஒரு ஆணையோ பெண்ணையோ அணைக்கும் போது அவ்வளவு பாதுகாப்பாக உணரலாம் என பேசி அனைவருக்கும் வாழ்த்து கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்