மிஷ்கினை மென்ட்டல் ஹாஸ்பிட்டலில் சேர்க்க வேண்டுமாம்…

திங்கள், 5 ஜூன் 2017 (12:24 IST)
என்னை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.



 


விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள படம் ‘துப்பறிவாளன்’. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. பரவலான மக்களிடம் படத்தைக் கொண்டு சேர்க்க, பலவிதமான திட்டங்களை தான் வைத்திருப்பதாகக் கூறியுள்ளார் மிஷ்கின். ஆனால், மல்ட்டி-லிங்குவல் படம் எடுப்பது, படைப்பாளியைச் சோர்வாக்கும் விஷயம் எனத் தெரிவித்துள்ளார் அவர்.

“ஒவ்வொரு ஸீனையும் இரண்டு அல்லது அதற்கு மேல் ஷூட் செய்ய வேண்டும்; வேறு வேறு மொழிகளில் நடிகர்களைப் பேசவைக்க வேண்டும்; ஒவ்வொரு மொழிக்குமான நேட்டிவிட்டி மிஸ் ஆகாமல் இருக்கிறதா என மானிட்டர் செய்ய வேண்டும் – என்னைப் பொறுத்தவரையில் இதெல்லாம் கஷ்டமான விஷயங்கள்.

சில இயக்குநர்கள் இதையெல்லாம் எப்படிச் செய்கிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக உள்ளது. என்னால் இதை முயற்சித்து கூடப் பார்க்க முடியாது. ஒரு மொழியில் ஷூட் செய்வதே அலுப்பான விஷயம். ஒருவேளை அப்படி நான் மல்ட்டி-லிங்குவல் படம் எடுத்தால், அது கொடுக்கும் அழுத்தத்தால் என்னை மனநல மருத்துவமனையில்தான் சேர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் மிஷ்கின்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்