பெரிதாக ஒன்றுமில்லை இதுதான் சாமி ஸ்கொயர் கதை: ஹரி

செவ்வாய், 24 ஜூலை 2018 (14:22 IST)
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள சாமி ஸ்கொயர் படத்தின் கதையை இயக்குநர் இசை வெளியிட்டு விழா வெளிப்படையாக கூறிவிட்டார்.

 
ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் சாமி ஸ்கொயர். சாமி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. விக்ரம் போலீஸாக நடித்து அசத்தியிருப்பார். 
 
ஹரி தொடர்ச்சியாக போலீஸ் கதையை மையாம வைத்து சிங்கம் என்ற பெயரில் மூன்று பாகங்கள் எடுத்துவிட்டார். தற்போது மீண்டும் சாமி ஸ்கொயர் எடுத்து உள்ளார். 
 
ஹரி படங்களே என்றாலே இப்படிதான் இருக்கும் என்று ரசிகர்கள் எளிதாக கணித்து விடுகிறார். இவரும் ஒரே மாதிரியாக திரைக்கதையில் வேகத்தை மட்டுமே வைத்து படத்தை எடுத்து வருகிறார்.
 
நேற்று சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியிட்டு விழா நடைப்பெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துக்கொண்டனர். அப்போது பேசிய இயக்குநர் ஹரி படத்தின் கதையை வெளிப்படையாக கூறியுள்ளார்.
 
சாமி படத்தை 2003-ல் உருவாக்கினோம். அப்போவே சாமியின் வேட்டை தொடரும் என்று போட்டிருந்தேன். நிறைய பேர், புதுசு புதுசாக கதை சொல்கிறார்கள், ரொம்ப யோசிக்க வேண்டாம், கதையை நானே சொல்கிறேன். பெருமாள் பிச்சை குடும்பத்துக்கும், ஆறுச்சாமி குடும்பத்துக்கும் நடக்கும் போராட்டம் தான் சாமி ஸ்கொயர் படத்தின் கதை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்