ஒரே கம்பெனிக்கு ஆறாவது படம்… தேதிகளை வாரி வழங்கும் தனுஷ்

திங்கள், 17 மே 2021 (16:25 IST)
நடிகர் தனுஷ் சத்யஜோதி பிலிம்ஸுக்காக ஆறாவதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகர் தனுஷ் சத்யஜோதி பிலிம்ஸுக்காக தொடரி என்ற படத்தில் நடித்தார். அந்த படம் அட்டர் பிளாப் ஆனதால், மீண்டும் அந்த நிறுவனத்துக்கு படங்களில் நடித்து தருவதாக வாக்குறுதி அளித்தார். அதையடுத்து 3 படங்கள் அந்த நிறுவனத்துக்காக நடிக்க ஒப்புக்கொண்டார். அதில் பட்டாஸ் படம் வெளியாகியுள்ளது. இப்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படமும் பாலாஜி மோகன் இயக்கத்தில் ஒரு படமும் உருவாக்கத்தில் உள்ளது.

இந்நிலையில் முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் விரைவில் உருவாக உள்ளது. இந்நிலையில் இப்போது அடங்கமறு இயக்குனர் இயக்கத்திலும் ஒரு படத்தை சத்யஜோதி நிறுவனத்துக்காக நடிக்க உள்ளாராம். இந்த கதையை சொல்ல கார்த்திக் தங்கவேல் லண்டனுக்கு சென்று கதை சொல்லியுள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்