தனுஷ் ஜோடியாக மீண்டும் நடிக்க கிடைத்த வாய்ப்பை அமலா பால் உதறியுள்ளாராம். வட சென்னை படத்தில் இருந்து அமலாபால் வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமலாபால் கை நிறைய படங்கள் மற்றும் கால்ஷீட் ஒதுக்க முடியவில்லையாம். மேலும் வட சென்னை படத்தின் ஷூட்டிங் இழுத்துக் கொண்டே போவதால் அமலாவுக்கு டேட்ஸ் பிரச்சனை ஏற்பட்டு விலகியுள்ளதாக கூறப்படுகிறது.