யோகி பாபுவுக்கு முதல் முதலாக கிடைத்த திருமண பரிசு

செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (20:30 IST)
யோகி பாபுவுக்கு முதல் முதலாக கிடைத்த திருமண பரிசு
நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கும் மஞ்சுபார்கவி என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் ரகசிய திருமணம் நடைபெற்றது என்பதும் இதனை அடுத்து விரைவில் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ’கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பில் யோகி பாபு இன்று கலந்துகொண்டார். திருமணத்திற்கு பின் ஒன்று தான் அவர் முதன்முதலாக படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து யோகிபாபுவுக்கு படக்குழுவினர் வாழ்த்துக் கூறினார்கள். யோகி பாபுவுக்கு நடிகர் தனுஷ் தங்கச் செயினை பரிசாக அளித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்
 
யோகிபாபு திருமணத்திற்கு திரையுலகில் முதல் முதலாக பரிசு அளித்து வாழ்த்து தெரிவித்தவர் நடிகர் தனுஷ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. யோகிபாபுவுக்கு தனுஷ் தங்க செயின் அணியும்  புகைப்படம் ஃபேஸ்புக் ட்விட்டர் உள்ளிட்ட வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்