தமன் இசையில் தெலுங்கில் பாடிய தனுஷ்

வியாழன், 21 ஜூலை 2016 (12:52 IST)
கொலவெறி பாடலுக்குப் பிறகு தனுஷ் தொழில்முறை பாடகராகவே மாறிவிட்டார். அந்தளவு அழைப்புகள், வாய்ப்புகள். இதுவரை தமிழ்ப் படங்களில் பாடிக் கொண்டிருந்தவர் முதல்முறையாக தெலுங்கு பாடல் ஒன்றை பாடியுள்ளார்.



தெலுங்கில் தமன் இசையமைத்துவரும் திக்கா என்ற படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை தமனின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க தனுஷ் பாடி தந்துள்ளார். வெறும் 25 நிமிடங்களில் இந்த பாடல் பதிவு முடிந்ததாகவும், தொழில்முறை பாடகரைப் போல் தனுஷ் பாடி அசத்தியதாகவும் தமன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் சாய் தரம் தேஜ் நாயகனாக நடிக்கிறார்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்