பிரபல நடிகை தீபிகா படுகோன் “ஓம் சாந்தி ஓம்” திரைப்படம் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானார். தமிழில் கோச்சடையான் என்ற அனிமேஷன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் பாலிவுட்டில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் மீனலோச்சினி என்ற கதாப்பாத்திரத்தில் தமிழ் பெண்ணாக நடித்தார். இதன் பிறகு தற்போது ஹிரித்திக் ரோஷன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் தமிழ் பெண்ணாக நடிக்கவுள்ளார்.