மீரா மிதுன் யூட்யூப் சேனல் முடக்கம்? – மத்திய சைபர் க்ரைம் போலீஸார் கடிதம்

புதன், 18 ஆகஸ்ட் 2021 (12:52 IST)
பட்டியலின மக்களை இழிவாக பேசி வீடியோ வெளியிட்ட மீரா மிதுனின் யூட்யூப் சேனலை முடக்க சைபர் க்ரைம் போலீஸார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

பட்டியலின மக்களை இழிவாக பேசி வீடியோ வெளியிட்டதற்காக நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மீரா மிதுன் நேரில் ஆஜராகததால் தமிழக காவல்துறை மீரா மிதுனை கேரளாவிலிருந்து கைது செய்து தமிழகம் கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இழிவாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் தொடர்ந்து பேசி வீடியோ வெளியிட்டு வரும் மீரா மிதுனின் யூட்யூப் சேனலை முடக்க மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸ் யூட்யூப் நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்